138. மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப் போதிடங் கொண்டபொன் வேங்கை தினைப்புனங் கொய்கவென்று தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று சோதிடங் கொண்டிதென் மைக்கெடு வித்தது தூமொழியே.