141. கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய் வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய் நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே.