பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
311

144

144. பரிவுசெய் தாண்டம் பலத்துப்
        பயில்வோன் பரங்குன்றின்வாய்
    அருவிசெய் தாழ்புனத் தைவனங்
        கொய்யவு மிவ்வனத்தே
    பிரிவுசெய் தாலரி தேகொள்க
        பேயொடு மென்னும்பெற்றி
    இருவிசெய் தாளி னிருந்தின்று
        காட்டு மிளங்கிளியே.