பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
313

146

146. பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
        புலியூ ரரன்பொருப்பே
    இதுவெனி லென்னின் றிருக்கின்ற
        வாறெம் மிரும்பொழிலே
    எதுநுமக் கெய்திய தென்னுற்
        றனிரறை யீண்டருவி
    மதுவினிற் கைப்புவைத் தாலொத்த
        வாமற்றிவ் வான்புனமே.