பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
314

147

147. ஆனந்த மாக்கட லாடுசிற்
        றம்பல மன்னபொன்னின்
    தேனுந்து மாமலைச் சீறூ
        ரிதுசெய்ய லாவதில்லை
    வானுந்து மாமதி வேண்டி
        அழுமழப் போலுமன்னோ
    நானுந் தளர்ந்தனன் நீயுந்
        தளர்ந்தனை நன்னெஞ்சமே.