149. விசும்பினுக் கேணி நெறியன்ன சின்னெறி மேன்மழைதூங் கசும்பினிற் றுன்னி அளைநுழைந் தாலொக்கும் ஐயமெய்யே இசும்பினிற் சிந்தைக்கு மேறற் கரிதெழி லம்பலத்துப் பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்தெம் வாழ்பதியே.