பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
144

15

15. வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
        யம்பல வன்மலயத்
   திருங்குன்ற வாண ரிளங்கொடி
        யேயிட ரெய்தலெம்மூர்ப்

  
பருங்குன்ற மாளிகை நுண்கள
        பத்தொளி பாயநும்மூர்க்
   கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக
        மேய்க்குங் கனங்குழையே.