150. மாற்றே னெனவந்த காலனை யோல மிடஅடர்த்த கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி மேற்றேன் விரும்பு முடவனைப் போல மெலியுநெஞ்சே ஆற்றே னரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே.