151. கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த் தூளி நிரைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால் ஆளி நிரைத்தட லானைகள் தேரு மிரவில்வந்து மீளியுரைத்தி வினையே னுரைப்பதென் மெல்லியற்கே.