பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
322

152

152. வரையன் றொருகா லிருகால்
        வளைய நிமிர்த்துவட்கார்
    நிரையன் றழலெழ வெய்துநின்
        றோன்தில்லை யன்னநின்னூர்
    விரையென்ன மென்னிழ லென்ன
        வெறியுறு தாதிவர்போ
    துரையென்ன வோசிலம் பாநலம்
        பாவி யொளிர்வனவே.