பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
324

154

154. பனைவளர் கைம்மாப் படாத்தம்
        பலத்தரன் பாதம்விண்ணோர்
    புனைவளர் சாரற்பொதியின்
        மலைப்பொலி சந்தணிந்து
    சுனைவளர் காவிகள் சூடிப்பைந்
        தோகை துயில்பயிலுஞ்
    சினைவளர் வேங்கைகள் யாங்கணின்
        றாடுஞ் செழும்பொழிலே.