பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
325

155

155. மலவன் குரம்பையை மாற்றியம்
        மால்முதல் வானர்க்கப்பாற்
    செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக்
        கானலிற் சீர்ப்பெடையோ

டலவன் பயில்வது கண்டஞர்
        கூர்ந்தயில் வேலுரவோன்
    செலவந்தி வாய்க்கண் டனனென்ன
        தாங்கொன்மன் சேர்துயிலே.