பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
332

160

160. முன்னு மொருவ ரிரும்பொழில்
        மூன்றற்கு முற்றுமிற்றாற்
    பின்னு மொருவர்சிற் றம்பலத்
        தார்தரும் பேரருள்போல்
    துன்னுமொ ரின்பமென் றோகைதந்
        தோகைக்குச் சொல்லுவபோல்
    மன்னு மரவத்த வாய்த்துயில்
        பேரும் மயிலினமே.