163. நந்தீ வரமென்னும் நாரணன் நாண்மலர்க் கண்ணிற்கெஃகந் தந்தீ வரன்புலி யூரனை யாய்தடங் கண்கடந்த இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர் சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே.