164. காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோனடைத்த தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே நாமரை யாமத் தென் னோவந்து வைகி நயந்ததுவே.