167. சுரும்புறு நீலங் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ அரும்பெறற் றோழியொ டாயத்து நாப்ப ணமரரொன்னார் இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர் துரும்புறச் செற்றகொற் றத்தெம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே.