பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
341

168

168. நற்பகற் சோமன் எரிதரு
        நாட்டத்தன் தில்லையன்ன
    விற்பகைத் தோங்கும் புருவத்
        திவளின் மெய்யேயெளிதே
    வெற்பகச் சோலையின் வேய்வளர்
        தீச்சென்று விண்ணினின்ற
    கற்பகச் சோலை கதுவுங்கல்
        நாடஇக் கல்லதரே.