பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
345

171

171. நாகந் தொழவெழில் அம்பலம்
        நண்ணி நடம்நவில்வோன்
    நாக மிதுமதி யேமதி
        யேநவில் வேற்கையெங்கள்
    நாகம் வரவெதிர் நாங்கொள்ளும்
        நள்ளிருள் வாய்நறவார்
    நாகம் மலிபொழில் வாயெழில்
        வாய்த்தநின் நாயகமே.