172. மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய் என்னங் கலமர லெய்திய தோவெழின் முத்தந்தொத்திப் பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும் அன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே.