பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
347

173

173. சோத்துன் னடியமென் றோரைக்
        குழுமித்தொல் வானவர்சூழ்ந்
    தேத்தும் படிநிற்ப வன்தில்லை
        யன்னா ளிவள்துவள

    ஆர்த்துன் னமிழ்துந் திருவும்
        மதியும் இழந்தவம்நீ
    பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
        நோக்காய் பெருங்கடலே.