பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
350

175

175. இன்னற வார்பொழிற் றில்லை
        நகரிறை சீர்விழவிற்
    பன்னிற மாலைத் தொகைபக
        லாம்பல் விளக்கிருளின்

துன்னற வுய்க்குமி்ல் லோருந்
        துயிலில் துறைவர்மிக்க
    கொன்னிற வேலொடு வந்திடின்
        ஞாளி குரைதருமே.