178. பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப் பரன்பரங் குன்றினின்ற புற்றொன் றரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால் மற்றுன்று மாமல ரிட்டுன்னை வாழ்த்திவந் தித்தலன்றி மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே.