179. பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர் ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே ஆங்கணைந் தார்நின்னை யும்முள ரோசென் றகன்றவரே.