பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
355

180

180. அலரா யிரந்தந்து வந்தித்து
        மாலா யிரங்கரத்தால்
    அலரார் கழல்வழி பாடுசெய்
        தாற்கள வில்லொளிகள்
    அலரா விருக்கும் படைகொடுத்
        தோன்தில்லை யானருள்போன்
    றலராய் விளைகின்ற தம்பல்கைம்
        மிக்கைய மெய்யருளே.