181. புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று நிகழும் நிகழா நிகழ்த்தினல் லாலிது நீநினைப்பின் அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப் போதுசென்னித் திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே.