185. உள்ளு முருகி யுரோமஞ் சிலிர்ப்ப வுடையவனாட் கொள்ளு மவரிலொர் கூட்டந்தந் தான்குனிக் கும்புலியூர் விள்ளும் பரிசுசென் றார்வியன் தேர்வழி தூரற்கண்டாய் புள்ளுந் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே.