பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
363

186

186. ஆழி திருத்தும் புலியூ
        ருடையான் அருளினளித்
    தாழி திருத்தும் மணற்குன்றின்
        நீத்தகன் றார்வருகென்

    றாழி திருத்திச் சுழிக்கணக்
கோதிநை யாமலைய
    வாழி திருத்தித் தரக்கிற்றி
        யோவுள்ளம் வள்ளலையே.