188. பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கரி யோனெவ ரும்புகலத் தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால் அகலோங் கிருங்கழி வாய்க்கொழு மீனுண்ட அன்னங்களே.