19. பூங்கனை யார்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள் ஆங்கெனை யாண்டு கொண்டாடும் பிரானடித் தாமரைக்கே பாங்கனை யானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால் ஈங்கெனை யார்தடுப் பார்மடப் பாவையை யெய்துதற்கே