பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
369

191

191. மூவல் தழீஇய அருண்முத
        லோன் தில்லைச்செல்வன்முந்நீர்
    நாவல் தழீஇயவிந் நானிலந்
        துஞ்சும் நயந்தவின்பச்
    சேவல் தழீஇச்சென்று தான்துஞ்சும்
        யான்துயி லாச்செயிரெங்
    காவல் தழீஇயவர்க் கோதா
        தளிய களியன்னமே.