193. வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த் தளருந் தடவரைத் தண்சிலம் பாதன தங்கமெங்கும் விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின் றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்ன வொண்ணுதலே.