196. பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற் காப்பணிந் தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ கோப்பணி வான்றோய் கொடிமுன்றில் நின்றிவை ஏர்குழுமி மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே.