197. எலும்பா லணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்றும் நல்கினுங் கல்வரை நாடரம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்நீ கருதுவதே.