பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
379

198

198. விசும்புற்ற திங்கட் கழும்மழப்
        போன்றினி விம்மிவிம்மி

    அசும்புற்ற கண்ணோ டலறாய்

        கிடந்தரன் தில்லையன்னாள்
    குயம்புற் றரவிடை கூரெயிற்
        றூறல் குழல்மொழியின்
    நயம்பற்றி நின்று நடுங்கித்

        தளர்கின்ற நன்னெஞ்சமே.