பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
380

199

199. மைதயங் குந்திரை வாரியை
        நோக்கி மடலவிழ்பூங்
    கைதையங் கானலை நோக்கிக்கண்
        ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
    பொய்தயங் குந்நுண் மருங்குல்நல்
        லாரையெல் லாம்புல்லினாள்
    பைதயங் கும்மர வம்புரை
        யும்மல்குற் பைந்தொடியே.