202. பிணையுங் கலையும்வன் பேய்த்தே ரினைப்பெரு நீர்நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே இணையும் அளவுமில் லாஇறை யோனுறை தில்லைத்தண்பூம் பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே.