பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
384

203

203. இங்கய லென்னீ பணிக்கின்ற
        தேந்தல் இணைப்பதில்லாக்
    கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத
        லண்ணல் கடிகொள்தில்லைப்
    பங்கயப் பாசடைப் பாய்தடம்
        நீயப் படர்தடத்துச்
    செங்கய லன்றே கருங்கயற்
        கண்ணித் திருநுதலே.