204. தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந் நாண்தகைசால் வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங் கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடும்எங் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே.