205. குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய் நறப்பாடலம்புனை வார்நினை வார்தம் பிரான்புலியூர் மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்று சென்று பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் னத்தகும் பெற்றியரே.