21. கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே தேம்பற் றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள் ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே.