211. பனிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் அனிச்சந் திகழுமஞ் சீறடி யாவ அழல்பழுத்த கனிச்செந் திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால் இனிச்சந்த மேகலை யாட்கென்கொ லாம்புகுந் தெய்துவதே.