219. அன்பணைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன் பின்பணைத் தோளி வருமிப் பெருஞ்சுரஞ் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுறை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணற வுண்அளி போன்றொளிர் நாடகமே.