221. மின்றங் கிடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர் குன்றங் கடந்துசென் றால்நின்று தோன்றுங் குரூஉக்கமலந் துன்றங் கிடங்குந் துறைதுறை வள்ளைவெள் ளைநகையார் சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே.