222. மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப் பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய் நின்போல் நடையன்னந் துன்னிமுன் தோன்றுநன் னீணகரே.