பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
408

223

223. செய்குன்றுவைஇவை சீர்மலர்
        வாவி விசும்பியங்கி
    நைகின்ற திங்களெய்ப் பாறும்
        பொழிலவை ஞாங்கரெங்கும்

    பொய்குன்ற வேதிய ரோதிடம்
        உந்திடம் இந்திடமும்
    எய்குன்ற வார்சிலை யம்பல
        வற்கிடம் ஏந்திழையே.