228. தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப் பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்கும்நங் காய்எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானிற் சிலம்படியாய் ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற அம்மனைக்கே.