229. தழுவின கையிறை சோரின் தமியமென் றேதளர்வுற் றழுவினை செய்யுநை யாவஞ்சொற் பேதை யறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ் சுண்டம் பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே.