பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
416

230

230. யாழியன் மென்மொழி வன்மனப்
        பேதையொ ரேதிலன்பின்
    தோழியை நீத்தென்னை முன்னே
        துறந்துதுன் னார்கண்முன்னே
    வாழியிம் மூதூர் மறுகச்சென்
        றாளன்று மால்வணங்க
    ஆழிதந் தானம் பலம்பணி
        யாரின் அருஞ்சுரமே.