பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
417

231

231. கொன்னுனை வேல்அம் பலவற்
        றொழாரிற்குன் றங்கொடியோள்
    என்னணஞ் சென்றன ளென்னணஞ்
        சேரு மெனஅயரா
    என்னனை போயினள் யாண்டைய
        ளென்னைப் பருந்தடுமென்
    றென்னனை போக்கன்றிக் கிள்ளையென்
        னுள்ளத்தை யீர்கின்றதே.