பக்க எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
422

236

236. முன்னுங் கடுவிட முண்டதென்
        தில்லைமுன் னோனருளால்
    இன்னுங் கடியிக் கடிமனைக்
        கேமற் றியாமயர
    மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்
        தான்பெறு மாறுமுண்டேல்
    உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள்
        நான்மறை யுத்தமரே.